துணை சுகாதார நிலையங்களில் மீண்டும் தடுப்பூசி,சொட்டு மருந்து வழங்கல்
Posted on September 4th, 2010 at 06:36 AM and last modified on September 5th, 2010 at 8:57 am.
தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் மீண்டும் சுகாதார செவிலியர்களே தடுப்பூசி, சொட்டு மருந்துகளை குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் சுகாதார செவிலியர்கள் புதன் தோறும் கிராமங்களுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து, மஞ்சள்காமாலை, காசநோய், தட்டம்மை தடுப்பூசிகள் போடுவர்.மேலும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்தையும் வழங்குவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 3 குழந்தைகள் இறந்தனர்.இதையடுத்து டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல், சுகாதார செவிலியர்கள் தடுப்பூசி போடக்கூடாது. அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமங்களில் இருந்து பெண்கள் தங்கள் குழந்தைகளை தடுப்பூசி போட அழைத்து வருவதில்லை. சுகாதார செவிலியர்கள் பல முறை முயற்சி எடுத்தும் பலன் இல்லாமல் போனது.ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பெண்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டாததால் மீண்டும் துணை சுகாதார நிலையங்களிலேயே அந்தந்த சுகாதார செவிலியர்களே தடுப்பூசி, சொட்டு மருந்து, வைட்டமின் மருந்து, மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.




News Archives