Updated May 21, 2012 8:40 am IST, 1,993 articles

(Private social website for welfare & development of the town)

தகுதியுடைய அனைவருக்கும் கல்லூரி கல்விக் கடன் நிச்சயம் : முன்னோடி வங்கி அதிகாரி உறுதி

Posted on September 4th, 2010 at 06:52 AM and last modified on September 8th, 2010 at 9:22 am.

தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி கல்விக் கடன் நிச்சயம் வழங்கப்படும் என முன்னோடி வங்கி மேலாளர் அர்ஜூனன் முத்தையா தெரிவித்தார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் கல்விக்கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்ட திட்ட இயக்குனர் அருண்மணி முகாமை துவக்கி வைத்தார். தேசிய வங்கிகளின் கிளை மே லாளர்கள் விண்ணப்பங் களை பெற்றனர்.

முன்னோடி வங்கி மேலாளர் அர்ஜூனன் முத் தையா கூறுகையில்,”பெறப்படும் விண்ணப்பங்கள் அந்தந்த வங்கிகளில் ஆய்வு செய்யப்படும்.

விண்ணபதாரர்களுக்கு கடன் அவசியம் வழங்கப்படும். செப். 15ல் அந்தந்த வங்கிகளை அணுகி கடன் கிடைக் கும் விபரத்தை அறியலாம். முகாமில் பங்கேற்காத தகுதியுடைய மாணவர்களுக்கும் கல்வி கடன் அவசியம் கிடைக்கும்,’ என்றார்.

Source:Dinamalar

Filed Under Flash News Archives | By

About Vijisarp

Registered author since 2010-07-24 10:56:08 Follow :

Comment

  1. sendilnathan says:

    iam satisfied with this education welfare