Updated May 21, 2012 8:40 am IST, 1,993 articles

(Private social website for welfare & development of the town)

பல்கலை., தேர்வில் முறைகேடு பழநியில் மறுதேர்வுக்கு ஏற்பாடு

Posted on August 24th, 2010 at 06:31 AM and last modified on August 25th, 2010 at 7:53 am.

தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு காரணமாக பழநியில்  அழகப்பா பல்கலை., தேர்வுகள்  ரத்து செய்யப்பட்டன. இதற்கான மறுதேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக் கல்வி இயக்கக தொடர்பு மையம், பழநி ஆர்.எப்.ரோட்டில் உள்ளது. இங்கு படித்த மாணவர்களின் பல்வேறு படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு  கடந்த மே மாதம் பழநி ஸ்டாண்ட்டேட் மெட்ரிக்., மேல்நிலை பள்ளியில் நடந்தது. இம்மையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக அதிகாரிகள் கடந்த மே 15ல் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது தேர்வில் பிட் அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பழநி மையத்தில் நடந்த செமஸ்டர்  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு எழுதியவர்கள்  முறைகேட்டில் சம்பந்தப்படாதவர்களுக்கு மறு தேர்வு வைக்கக் கூடாது என்று பல்கலைகழகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.   இதனைத் தொடர்ந்து பழநியில் உள்ள  மற்றொரு தனியார் பள்ளியில்    பல்கலை,, அதிகாரிகளே நேரிடையாக விரைவில் தேர்வு நடத்த உள்ளனர்.

Source:Dinamalar

Filed Under Flash News Archives | By

About Vijisarp

Registered author since 2010-07-24 10:56:08 Follow :

Comment