Updated February 6, 2012 9:52 pm IST, 1,945 posts & 265 comments till date

(Private social website for welfare & development of the town)

பழநி வரதமாநதி அணையைபராமரிக்க நடவடிக்கை தேவை

Posted on September 3rd, 2010 at 06:44 AM

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பழநி வரதமாநதி அணையை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில், பழநி-கொடைக்கானல் ரோட்டில் வரதமாநதி அணை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், குளுமையான சூழலில் பசுமையான மரங்கள் பல உள்ளன.

இவை தவிர குடும்பத்தினருடன் இங்கு வந்து பொழுது போக்குவதற்கான பூங்காவும் உள்ளது. வாரந் தோறும் சனி, ஞாயிறு நாட்களில், இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம். அதற்கேற்ப அணையை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட பழநி மலைக்கோயில் பின்புறத்தில் இருந்தபோதும், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் இங்கு தாராளமாக உள்ளது. வீசி எறியப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல், பல இடங்களில் காணப்படுகிறது.

அணையின் மேற்குபுற பகுதியில், பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்த நிலையில் காணப் படுகின்றன. மலைக்குன்றில் அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கான ஓய்வு அறை, பராமரிப்பின்றி உள்ளது. புதர்ச்செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள் ளது. பூங்காவில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு அமைப்புகளும், பயன்படுத்த முடியாத நிலையில் சேத மடைந்துள்ளன.பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இவற்றை சீரமைப்ப துடன் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவும், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Filed Under Flash News Archives | Written by:

Get a Trackback link

No Comments Yet

You can be the first to comment!

Leave a comment

Type Comments in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)