^ Back to Top
Updated November 5th, 2013, 12:49 PM IST

Palani News

இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி – தினமலர்

பழநி புதுஆயக்குடியில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் ஆட்டு குட்டி பிறந்துள்ளது. ஆயக் குடி மஞ்சணக்கார வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல்,45. இவரின் ஒரு ஆடு நேற்று மாலை மூன்று குட்டிகள் ஈன்றது. ஒரு குட்டிக்கு 2 தலை, 2 மூக்குகள், 4 கண்களுயுடன் பிறந்தது. இந்த அதிசய ஆட்டிக்குட்டியை ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர்.

Filed Under Flash News Archives, Palani News | Comments Off on இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி – தினமலர் | Written by: Administrator

பழநி அணைப்பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் குறைகிறது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும் – தினமலர்

பழநி வட்டாரத்தில் தொடர் மழை இல்லாததால், பாலாறு பொருந்தலாறு, வரத மாநதி அணை உட்பட, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அணைகளின் நேற்றைய நிலவரம்: பாலாறுபொருந்தலாறு அணையில் 7 கன அடி குடிநீர் வெளியேற்றப் படுகிறது. நீர்மட்டம் 32 அடி (மொத்த உயரம் 65 அடி). குதிரையாறு அணையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 42.85 அடி (மொத்த உயரம் 80 அடி). வரதமாநதி அணையில் 2 கன அடி குடிநீர் தேவைக்காக வெளியேற்ற […]

Filed Under Palani News | Comments Off on பழநி அணைப்பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் குறைகிறது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும் – தினமலர் | Written by: Administrator

6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான “சவுக்கை’ கண்டுபிடிப்பு

பழநி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, “சவுக்கை’ (பெருங்கற்களாலான அமைப்பு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது “சவுக்கை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி கூறியதாவது: இங்குள்ள மலைப்பகுதியில் இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத […]

Filed Under Palani News | Comments Off on 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான “சவுக்கை’ கண்டுபிடிப்பு | Written by: Vijayakumar Selvaraj

பழநியில் வைகாசி விசாக விழா ; கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநியில், வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநிகோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோவிலில், நேற்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆறாம் நாளான,வரும், 23ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், திருக்கல்யாணம் நடக்கிறது. ஏழாம் நாளான, 24ம்தேதி வைகாசி விசாகத்தன்று, மலைக்கோயில் அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பெரியநாயகியம்மன் கோவில் […]

Filed Under Palani News | Comments Off on பழநியில் வைகாசி விசாக விழா ; கொடியேற்றத்துடன் துவக்கம் | Written by: Administrator

பழநி கோவிலில் 65 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் – தினமலர்

பாதுகாப்பு கருதி, பழநி கோவிலில், 23 லட்ச ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, புதிய, “அனலாக் கேமரா’ 65 இடங்களில் பொருத்தப்படுகிறது. பழநி கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் மட்டுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் பாதுகாப்பு கருதி, மலைக் கோவிலில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில், ஏற்கனவே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 23 லட்சம் ரூபாய் செலவில், மலைக்கோவிலில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன் மேல்தளம், கீழ்தளம் மற்றும் அன்னதானக் கூடம், பஞ்சாமிர்தம் தயார் செய்யும் […]

Filed Under Palani News | Comments Off on பழநி கோவிலில் 65 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் – தினமலர் | Written by: Administrator

Page 1 of 1212345...10...Last »

Quick Links