^ Back to Top
Updated October 11th, 2013, 11:07 AM IST
Updates

காசு… பணம்… துட்டு… மரம், மரம்!

Posted on September 30th, 2013 at 12:55 AM and last modified on October 11th, 2013 at 11:07 am.

காசு… பணம்… துட்டு… மரம், மரம்!  வனம் ‘மரம், மண்ணின் வரம்!’ என்றார், கவிஞர் வைரமுத்து. ‘அவை, மனிதனுக்கு வளம்’ என்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி மரப்பயிர் விவசாயி, தேவராஜன். கடந்த 12 ஆண்டுகளாக கோயம்புத்தூர் மாவட்ட மரம் மற்றும் மூலிகைப் பயிர் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தேவராஜன், அன்னூர் அடுத்துள்ள கானூர்புதூர் கிராமத்திலிருக்கும் தனது 10 ஏக்கர் நிலத்தில், பலவிதமான மரங்களை வளர்த்து வருகிறார். சமீபத்தில், பெய்த பெருமழையின் ஈர மண்வாசனை, சிலிர்க்க வைக்கும் சிலுசிலு காற்று, குறுக்கும் நெடுக்குமாக காற்றில் ஏரோட்டும் பட்டாம் பூச்சிகள், குட்டி ‘ஹெலிகாப்டர்’களாக வட்டமடிக்கும் தும்பிகள், பெயர் தெரியாதப் பறவைகளின் கவியோசை… என சிறிய வனத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறது, அவருடையத் தோட்டம். ஆங்காங்கு கமகம வாசம் வீசும் பவளமல்லி; பறவைகளை ஈர்க்கும் சிங்கப்பூர் செர்ரி; கமண்டலம் செதுக்கத் தேவையான பலாசு மரம்; மணம் வீசும் இலைகளைக் கொண்ட பன்னீர் புஷ்ப. . .

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
காசு... பணம்... துட்டு... மரம், மரம்!, 5.0 out of 10 based on 1 rating
Filed Under Agriculture Tips | By

Comment

Quick Links