Updated February 6, 2012 9:52 pm IST, 1,945 posts & 265 comments till date

(Private social website for welfare & development of the town)

குளங்கள் இணைக்க நிதி: மாநாட்டில் வலியுறுத்தல்

Posted on September 3rd, 2010 at 06:42 AM

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் குளங்கள், கண்மாய்களை இணைக்க தனி நிதி ஒதுக்கீடு தேவை என கலெக்டர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார் பேசியதன் சுருக்கம்:

மாற்று திறனாளிகளுக்காக மாநிலத்தில் முதன் முறையாக திண்டுக்கல்லில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. 112 பேருக்கு வேலையும், 136 பேருக்கு வங்கிக்கடன் பரிந்துரை செய்யப்பட்டது. 3, 211 மாற்று திறனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப் பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளன.முன்னோடி திட்டமாக வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. தற்கொலை நிலைக்கு மாணவர்கள் செல்வதை தடுக்க மனநல ஆலோசனை வழங்கும் விதமாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது.

முதல்வர் காப்பீட்டு திட்டம் மாவட்டத்தில் 9,870 பேருக்கு நபர்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள் ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2007-08ல் தேசிய விருது திண்டுக்கல்லிற்கு கிடைத்துள்ளது. இதுவரை ரூ. 247 கோடி செலவிடப் பட்டுள்ளது. ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 821 குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர்.(84 சதவீத பெண்கள், 33 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்). 3 கோடி மனித சங்கிலி நாட்கள் உருவாக்கப் பட்டுள்ளது.

புதுமுயற்சி: இத்திட்டத்தின் கீழ் துர்ந்துபோன ஆக்கிரமிப்புக்குள் ளான குளங்கள் மற்றும் வாய்க்கால் கள் தூர்வாரி இணைக்கும் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டுள்ளது.முதல்கட்டமாக குஜிலியம்பாறை ஒன்றியம் தொப்பசாமிமலையிலிருந்து துவங்கி குடகனாற்றில் கலக்கும் நீரோடை எடுத்து கொள்ளப்பட்டது. பணிமுடியும்போது சுமார் 25 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படும். சுமார் 700 கிணறுகள், 500-க்கும் மேற்பட்ட ஆள்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,750 எக்டர் விவசாய நிலம் மேம்படும்.

* 2ம் கட்டமாக 13 ஒன்றியங்களில் குளம் மீட்டெடுக்கும் 78 பணிகள் ரூ. 3.56 கோடி மதிப்பீட்டில் நடக்கிறது. இதன்மூலம் 215 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படும். 22 ஆயிரம் எக்டர் விவசாய நிலம், 71 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும்.

* 3-ம் கட்டமாக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 34 குளங்கள், 2 ஆயிரத்து 427 கி.மீ., நீளமுள்ள கால்வாய்களில் இப்பணி செயல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மரக் கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் இப்பணிகள் செய்வதால் தனியாக நிதி தேவை ஏற்படவில்லை. பேரூராட்சி, நகர்புறங்களில் இப்பணியை மேற்கொள்ள தனியாக நிதி ஒதுக்கீடு செய்தால் நிறைவேற்ற முடியும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Filed Under Flash News Archives | Written by:

Get a Trackback link

No Comments Yet

You can be the first to comment!

Leave a comment

Type Comments in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)