Updated May 10, 2012 10:10 am IST, 1,991 articles

(Private social website for welfare & development of the town)

டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு மொபைல் நிறுவன அதிகாரிகள் சாட்சி

Posted on September 4th, 2010 at 06:42 AM and last modified on September 5th, 2010 at 8:57 am.

திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் 3 மொபைல் கம்பெனியின் நிர்வாக அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியமளித்தனர்.

திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன்(72). இவரை கடந்தாண்டு ஏப்ரல் 30ல் சிலர் கடத்தி கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கார்த்திக், மஞ்சுபார்கவி, நண்பர்கள் விவேக், துரைப்பாண்டி, சபீர், உமர், முகிலன், சங்கர், ராஜ்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று விரைவு கோர்ட்டில் நடந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் ஆஜராயினர்.

அரசு தரப்பில் ஏர்டெல் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், வோடோபோன் நிர்வாக அதிகாரி சுனில், பி.எஸ்.என்.எல்., விஜிலென்ஸ் அதிகாரி ஆதிவராகன் ஆகியோர் கடந்த 1.1.2009 முதல் 10.5.2009 வரை குற்ற ம் சாட்டப்பட்ட 9 பேரும் யார், யாரிடம் பேசினர்,எந்தெந்த டவரில் இருந்து பேசினர் என்பது குறித்து விளக்கமளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெங்கிடுசாமி உத்தரவிட்டார்.

Source:Dinamalar


Filed Under Flash News Archives | By

About Vijisarp

Registered author since 2010-07-24 10:56:08 Follow :

Comment