Updated February 6, 2012 9:52 pm IST, 1,945 posts & 265 comments till date

(Private social website for welfare & development of the town)

தகராறினால் ரயில்வே கேட்டில் அரசு பஸ் நின்றதால் பரபரப்பு

Posted on September 4th, 2010 at 06:44 AM and last modified on September 5th, 2010 at 8:57 am

வடமதுரை அருகே அரசு டவுன் பஸ் டிரைவர்- மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், ரயில்வே கேட்டில் அரை மணி நேரம் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை வழியே சிங்காரக் கோட் டை சென்ற அரசு டவுன் பஸ்சில் வழக்கம்போல ஏராளமான மாணவர்கள் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பிகளை பிடித்து கொண்டு பயணித்தனர். ஆபத்தான பயணம் செய்த மாணவர்களை டிரைவர் அந்தோணி கண்டித்தபடி பஸ்சை இயக்கினார். வடமதுரை ரயில்வே கேட்டை பஸ் கடந்தபோது இதுதொடர்பாக டிரைவர்- மாணவர்கள் வாக்குவாதம் ஏற் பட்டது. ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் ரயில்வே கேட் பகுதியிலேயே பஸ்சை நிறுத்திவிட்டார்.

இதனால் அரைமணி நேரம் ரயில்வே கேட்டை மூடாத சூழ்நிலை ஏற்பட்டது. வடமதுரை- காணப் பாடி ரோட்டிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து பாதிப் பிற்குள்ளானது. தகவறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை ரயில்வே கேட் பகுதியில் இருந்து நகர்த்தினர். சம்பவ நேரத்தில் ரயில் ஏதும் வராததால் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படவில்லை.

Source:Dinamalar


Filed Under Flash News Archives | Written by:

Get a Trackback link

No Comments Yet

You can be the first to comment!

Leave a comment

Type Comments in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)