Agriculture Tips
கோரை களையை அகற்ற யோசனை
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால் விளைநிலங்களில், எளிதில் அழிக்க முடியாத கோரை களைகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. விளைநிலங்களில் வளரும் புற்கள், கீரைசெடி, பார்த்தீனியா, கோரை, அருகம்புல் உள்ளிட்ட களைகள் பெரும் பிரச்னையாக உள்ளன. இவற்றில் கோரை மற்றும் அருகம்புல் பல பருவங்களுக்கும் தொடர்ச்சியாக உள்ளன. களையெடுத்தாலும், இவற்றின் கிழங்கு பூமிக்குள் தொடர்ந்து இருப்பதால் முற்றிலும் அழிப் பதில் சிரமம் ஏற்படுகிறது. தற்போது பெய்த மழையால், அதிகமான விளைநிலங்களில் கோரை வளர்ந் துள்ளது. உழவு செய்தாலும், முற்றிலும் […]
தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராக காபி
காபிக்கு போதிய விலை கிடைப்பதால், தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளது அதிகரித்துள்ளது. மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30க்கு மேற்பட்ட கிராமங்களில், தேயிலை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கிண்ணக்கொரை, இரியசீகை உட்பட பல பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், ஊடுபயிராக காபி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக, காபி பழங்கள் உள்ளன. தேயிலைக்கு விலை வீழ்ச்சியானாலும், காபிக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செம்மை நெல் சாகுபடியில் இடு பொருள் இலவசம்
சிவகங்கை: செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய்க்கு, இடு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. நீர், நிலவள திட்டத்தில், இரண்டரை ஏக்கர் பாசன வசதியுள்ளவர்களுக்கு நெல் விதை, தக்கை பூண்டு, உரம், பயிர்பாதுகாப்பு மருந்துகள் கிடைக் கும். விதை கிராம திட்டம்: குமரத்தகுடிப்பட்டி, சாத்தினிப்பட்டி, எம்.வையாபுரிப்பட்டி விவசாயிகளுக்கு, “ஏ.டி.டி.,-39, 45, நெல்விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் கர்நாடகா பொன்னி, ஏ.டி.டி.,- 45 விதைகள், ஐந்து ரூபாய் மானியத்தில் கிடைக்கும். […]
தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்த வேண்டுமா?
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தற்பொழுது தென்னையில் கருந்தலை புழுத் தாக்குதல் அதிகம் உள்ளதால் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர். ஒசூர் கோட்டத்தில் ஒல்லன்வாடி கிராமத்தில் உள்ள தென்னை மரங்களை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநர் ராஜன், வேளாண் விஞ்ஞானிகள் டாக்டர் சுந்தரராஜன், ரமேஷ்பாபு, வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் ஆகியோர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிசானப்பள்ளி, கொல்லப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, காரப்பள்ளி, வேப்பன்ப்பள்ளி, ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், […]
அதிக மகசூல் தரும் நுண்ணூட்டக் கலவை: வேளாண் துறை யோசனை
நுண்ணூட்டச் சத்து அளிப்பதன் மூலம் தென்னையை அதிக மகசூல் பெறும் பயிராக மாற்ற முடியும் என்று தமிழக வேளாண்துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் வெ.ஜெயசந்திரன் கூறினார். தென்னையில் நல்ல வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் என்பது மண்வளத்தை பொருத்தே அமைகிறது. நீண்டகால பயிரான தென்னை பல ஆண்டுகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இதனால் இதற்கு தொடர்ந்து நுண்ணூட்டச் சத்து தேவை. பொதுவாக விவசாயிகள், தழை, மணி, சாம்பல் சத்துகளையே பயிருக்கு அளிக்கின்றனர். நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், காப்பர், […]
Recommended Links