August, 2010
பணியாளர்கள் பற்றாக்குறை; தபால் அலுவலக பணி பாதிப்பு
சின்னாளபட்டி தபால் அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தாமதங்களால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சின்னாளபட்டி தபால் அலுவலகம் லோயர் ஸ்பெஷல் கிரேடு அந்தஸ்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஒரு போஸ்ட் மாஸ்டர் மற்றும் 5 கிளார்க்குகள் பணியாற்றினர். நாளடைவில் பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இங்கு பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். இந்த இடத்திற்கு புதிதாக அதிகாரி நியமிக்கப்படவில்லை. பணியில் உள்ள 3 கிளார்க்குகளில் சீனியராக […]
மலைக் கிராமங்களில் நக்சலைட் ஊருவலை தடுக்க போலீசாருக்கு உதவி
மலைக் கிராமங்களில் நக்சலைட் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசாருக்கு நவீன கருவிகள் வழங்கவும்,மலை வாழ் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யவும் போலீசார் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலைக்கிராமங்களில் நக்சலைட்கள் புகுந்து, அங்கு வசிக்கும் மக்களை தங்கள் இயக்கத்தில் சேர்க்கின்றனர். வேலையின்மையை பயன்படுத்தி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து,தங்கள் இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த நவீன் பிரசாத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்த […]
பழநியில் கடத்தப்பட்ட புது மாப்பிள்ளை போலீசில் வாக்குமூலம்
பழநியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புதுமாப்பிள்ளை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அக்கமநாயக்கன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(28). ஆட்டுக்காரரான இவர், கடந்த 26-ல் இதே ஊரிலுள்ள தோட்டம் ஒன்றில் ஆடுகளை கிடை போட்டிருந்தார். மறுநாள் காலையில் கிடை போட்டிருந்த இடத்தில் சுரேஷ்குமாரின் சட்டை கிழிந்த நிலையிலும்,செருப்பு கிடந்தன. வரும் செப்டம்பர் 10-ல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சுரேஷ்குமார் காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியுற்றனர். காணாமல் போனவரை கண்டுபிடித்து தரக் கோரி கரடிக்கூட்டத்தில் மறியல் செய்ய முயன்றனர். இந்நிலையில் மீண்டும் […]
பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம்: தமிழக அரசு முடிவு
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய மருத்துவ திட்டத்தை அறிவிக்க உள்ளது. இலவச கலர் “டிவி’, முதல்வர் காப்பீட்டு திட்டம், முதல்வர் வீட்டு வசதி திட்டம் போன்ற பல திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின் அடுத்த திட்டம் மாணவர்களை மையமாக கொண்டு அறிவிக்கப்பட உள்ளது. மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் புதிய திட்டம் அமையும். இதயம், கண்களில் குறை உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே சிகிச்சை தரப்படுகிறது. இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பள்ளிகளில் சிறப்பு முகாம் […]
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி சலுகை;இந்துக்களுக்கும் வேண்டும்
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி சலுகை, இந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கோரிக்கை வைத்துள்ளது. ஏ.பி.வி.பி., யின் மாநில செயற்குழு கூட்டம் பழநியில் நடந்தது. மாநில தலைவர் மோகன்தாஸ், செயலாளர் ஆர்.ராஜ்குமார், அமைப்புச் செயலாளர் சந்தீப் உள்ளிட்டோர் பேசினார்கள். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:”கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு அதிகமான ஸ்காலர்ஷிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சமமாக ஸ்காலர்ஷிப் வழங்க வேண்டும். […]
Recommended Links