^ Back to Top
Updated July 1st, 2010, 07:43 AM IST

June, 2010

அகில இந்திய கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி வெற்றி

திருச்செங்கோட்டில் நடந்த அகில இந்திய கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் கல்ச்சுரல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மவுசி நெப்போலியன் கபடிக் குழு நண்பர்கள் சார்பில் திருச்செங்கோட்டில் அகில இந்திய ஏ கிரேடு கபடி போட்டி நடந்தது.30 ஆண் கள் அணி,16 பெண்கள் அணி பங்கேற்றன.பெண்களுக்கான இறுதி போட்டியில் ஒட்டன்சத்திரம் கல்ச்சுரல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, கர்நாடக மாநிலம் மங்களூர் ஆல்வாஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஒட்டன் சத்திரம் கல்ச்சுரல் […]

Filed Under Flash News Archives | Comments Off on அகில இந்திய கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி வெற்றி | Written by: Special Reporter

ஆலயக்கவுண்டன்பட்டி பள்ளிகட்டடத்திற்கு சீரமைப்பு தேவை

ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள ஆலயக்கவுண்டன் பட்டி தொடக்க பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை ஊராட்சியில் ஆலயக்கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை மற்றும் கட்டடம் சேதமடைந்துள்ளதால் படிக்கும் மாணவர்களை பாதிக்கும் நிலை உள்ளது. கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்த போதிலும் அதில் நீர் இல்லாததால் மாணவர்கள் தண்ணீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி கட்டத்தை சீரமைப்புக்கவும், […]

Filed Under Flash News Archives | Comments Off on ஆலயக்கவுண்டன்பட்டி பள்ளிகட்டடத்திற்கு சீரமைப்பு தேவை | Written by: Special Reporter

காலாவதியான உணவு பொருள் பழநியில் தாராளமாக விற்பனை

பழநியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை தாராளமாக உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையில் காலாவதியான உணவை சாப்பிட்டதில் ஒருவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக பழநியில் நகராட்சி சுகாதாரத்துறையினர் கடைகளில் சோதனை நடத்தினர். சில கடைகளில் இருந்த உணவு பொருட் களை பறிமுதல் செய்தனர். கலப்பட பாலை பறிமுதல் செய்தனர். பழநியில் மீண்டும் காலாவதியான உணவு பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. திறந்த வெளியில் ஆட்டிறைச்சி கடைகள் முளைத்துள்ளன. இங்கு நகராட்சி அனுமதியின்றி ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் […]

Filed Under Flash News Archives | Comments Off on காலாவதியான உணவு பொருள் பழநியில் தாராளமாக விற்பனை | Written by: Special Reporter

நூலகர்களுக்கு மாற்றுப்பணி வாய்ப்பு எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளிகள்

நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்கள், மீண்டும் மாற்றுப்பணி வாய்ப்பு வழங்குவதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட மைய, கிளை, ஊர்ப்புறம் என ஆறாயிரத்து 500 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 800க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இந்நிலையில் நூலகர்களுக்கான மாற்றுப்பணி வழங்கியதில்,மோசடி நடந்துள்ளதாக பரவலாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஒரு ஆண்டில் வழங்கப்பட்ட மாற்றுப்பணி உத்தரவுகளை ரத்து செய்து, நூலகத்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மாற்றுப்பணியால் குடிபெயர்ந்து வெளியூர்களுக்குச் சென்ற பலர், முந்தைய இடங்களில் வேலைபார்க்க சென்று […]

Filed Under Flash News Archives | Comments Off on நூலகர்களுக்கு மாற்றுப்பணி வாய்ப்பு எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் | Written by: Special Reporter

பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை எட்டியது

பழநி கோயில் உண்டியல் வசூல் 20 நாட்களில் ரூ.86 லட்சத்தை எட்டியது. 48 கிராம் எடையுள்ள தங்க கிரீடம், 362 கிராம் எடையுள்ள வெள்ளி பாதங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோயில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.வசூல் வருமாறு.ரொக்கம் ரூ.85 லட்சத்து 82 ஆயிரத்து 798. தங்கம் 720 கிராம். வெள்ளி 9 ஆயித்து 562 கிராம்.அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் கரன்சிகள் 631. தங்கத்தினால் ஆன 48 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் ஒன்றும், […]

Filed Under Flash News Archives | Comments Off on பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை எட்டியது | Written by: Special Reporter

Page 1 of 5612345...102030...Last »

Quick Links