Updated February 6, 2012 9:52 pm IST, 1,945 posts & 265 comments till date

(Private social website for welfare & development of the town)

2 அரசு பஸ்கள்- லாரி மோதல் ஒருவர் பலி; 23 பேர் காயம்

Posted on August 14th, 2010 at 01:50 AM and last modified on August 15th, 2010 at 7:10 am

பழநி அருகே இரண்டு அரசு பஸ்கள், ஒரு லாரி மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத ஒருவர் பலியானார். பழநியில் இருந்து கோயம்புத்தூருக்கு, நேற்று மாலை 3 மணிக்கு பத்து நிமிட இடைவெளியில் இரண்டு அரசு பஸ்கள் புறப்பட்டன.  உடுமலை ரோட்டில், சுக்கமநாயக்கன்பட்டி அருகே டிரைவர் அக்பர் அலி ஓட்டிச் சென்ற பஸ் சை, மற்றொரு அரசு பஸ் முந்திச் செல்ல முயன்றது. அப்போது உடுமலையில் இருந்து பழநிக்கு வந்த லாரி நேருக்குநேர் மோதியது. பின்னர் அக்பர் அலி ஓட்டி வந்த பஸ்சும், இவற்றின் மீது மோதியது. இதில் அக்பர் அலி, கண் டக்டர் காளிமுத்து, முந்திச் செல்ல முயன்ற பஸ்சின் டிரைவர் வெங்கடேஷ் (30), கண்டக்டர் முத்துச்சாமி(50), பயணிகள் லக்கையன்கோட்டை பூபதி(33), அவரது மனைவி கவிதா(29), கோயம்புத்தூர் ஜோதிபாசு(35), அவரது மனைவி குழந்தையம் மாள்(32), மகள்கள் அபிராமி(16), சாரதாப்பிரியா(11), ஆனைமலை பாலு(40), வெள் ளைச்சாமி(36) உள் பட 24 பேர் காயமடைந்தனர். பழநி டி.எஸ்.பி., பாண்டியராஜன், தீயணைப்புத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை மீட்டு பழநி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 50 வயது மதிப்புள்ள அடையாளம் தெரியாத முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  மேலும் கண்டக்டர் காளிமுத்து, டிரைவர் வெங்கடேஷ், உடுமலை முத்து(32), ஆனைமலை குஞ்சாயம்மாள்(60), அம்சவேணி(40), வினோத்(10) ஆகியோர் மேல்சிகிச்சைக் காக, கோயம்புத்தூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பழநி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Filed Under Flash News Archives, Palani News | Written by:

Get a Trackback link

No Comments Yet

You can be the first to comment!

Leave a comment

Type Comments in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)